திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்

திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்
X
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் இணைந்தனர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையிலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையிலும், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து புதூர் முன்னாள் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், 1-வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், 4வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான தங்க மாரியம்மாள், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சூரியகுமார் ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india