கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் மனு

கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் மனு
X

கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் மானாவாரி விவசாய நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி பத்திரப்பதிவு செய்து அங்கு குவாரி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதை கண்டித்தும், விவசாய நிலம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் என்பதால் குவாரி உரிமம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாய நிலத்தை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து விவசாய சங்கம் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே.அருமைராஜ் தலைமை தாங்கினார். அனைத்து ரத்ததான கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணா,செண்பகராஜ் விஜயகுமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோட்டாட்சியர் (பொறுப்பு) சதீஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!