நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
X

கோவில்பட்டி அருகே நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் காமநாயக்கன்பட்டியில் உள்ள குருவிநத்தம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 17 வாக்குச்சாவடிகளுக்கான முகவர்கள் மற்றும் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே ஒரு அரசியல் கட்சியின் சாதாரண தொண்டனும் தலைவனாக முடியும் என்ற வரலாற்றை படைத்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் மக்களுக்கு தான் அடிமை.

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தி.மு.க.வால் ஜெயிக்க முடியாது. அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க .அமோக வெற்றி பெறும். மக்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் அம்பிகை பாலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, கடம்பூர் விஜி, கோபி, முருகன், பழனி குமார், சாத்தூர் அப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!