அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை பற்றி கடம்பூர் ராஜூ பேட்டி
கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பூத் கமிட்டி பொறுப்பாளர் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான காஞ்சி பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
முன்னதாக அ.தி.மு.க. கொடி சின்னம் லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓபிஎஸ் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை வரவேற்கும் வகையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கட்சியின் உச்ச பட்ச அமைப்பு பொதுக்குழு தான். பொதுக் குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றபட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து உள்ளது. அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி ,லெட்டர் பேடு உள்ளிட்டவை தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
திரும்ப திரும்ப இந்த விவகாரத்தை நீதி மன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்று ஓ.பி.எஸ் க்கு உயர்நீதிமன்றம் சாட்டையடியாக ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவது என்பது உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை நினைவுப்படுத்துகிறது.
இவ்வாறு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், வண்டானம், கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, காந்தி என்ற காமாட்சி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், மேற்கு ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் விக்னேஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன், பழனி குமார், சாத்தூர் அப்பன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu