/* */

காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்

கோவில்பட்டி காப்பகத்தில் தங்கியிருக்கும், மனநலம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  ஆதார் பதிவு சிறப்பு முகாம்
X

கோவில்பட்டியில், காப்பகங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு நடைபெற்றது. 

தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் உத்தரவுக்கு இணங்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி, ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், செம்மபுதூர், முடுக்கு மீண்டான்பட்டி ஆகிய இரு காப்பகங்களில் தங்கி இருக்கும் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், எட்டையாபுரம் தாசில்தார் ஐயப்பன் . கோவில்பட்டி தாசில்தார் அமுதா ஆகியோரின் ஏற்பாட்டின்படி நடந்த இரு நாள் சிறப்பு முகாமில், 32 ஆண்கள், 15 பெண்களுக்கு ஆதார் பதிவு செய்யப் பட்டது. அனைவருக்கும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி தேன்ராஜாவிடம், ரசீது ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் புஷ்பராஜ், கற்பக புஷ்பம் ஆகியோர், ஆதார் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...