ரூ. 1.10 லட்சம் கொடுத்து லியோ படத்தின் டிக்கட் வாங்கிய விஜய் ரசிகர்

ரூ. 1.10 லட்சம் கொடுத்து லியோ படத்தின் டிக்கட் வாங்கிய விஜய் ரசிகர்
X

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்றை ரசிகர் ஒருவர் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்றை ரசிகர் ஒருவர் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியது. இந்த திரைப்படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஆக்சனில் விஜய் அசத்தி இருப்பதாகவும், படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லெட்சுமி என மூன்று திரையரங்குகளில் 7 ஸ்கீரின்களில் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. முதல் காட்சியை காண திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளம் முழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நடிகர் விஜய் படத்திற்கு மாலை அணிவித்தும், வண்ண வண்ண கலர் மத்தாப்புகளால் படத்திற்கு காண்பித்தும் கொண்டாடினர். சில ரசிகர்கள் விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். முதல் காட்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ரசிகர்களை வரிசைப்படுத்தி திரையரங்குகளுக்குள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, கோவில்பட்டியில் லியோ படத்தின் முதல் காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

இருப்பினும், ரசிகர் காட்சி என்பதால் மொத்த டிக்கட்டுகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றதால் அந்த பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு நிதியுதவி வழங்கும் வகையில் அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கியதாக செல்வின் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business