தாமிரபரணியில் உயிர் நீத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுத் தூண்

தாமிரபரணியில் உயிர் நீத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுத் தூண்
X

கோவில்பட்டியில் மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு தூண் எழுப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் சமுதாய மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தின்போது, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் அடிப்படை வசதி மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கினை சரி செய்து விட வேண்டும் மேலும் செவிலியர்களை அதிகப்படுத்த வேண்டும். ரத்தப் பரிசோதனை மருத்துவரை நியமித்திட வேண்டும்.

கோவில்பட்டி பகுதியில் பிரதான தொழிலாக விளங்கும் தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பதற்கு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ரூபாய் 20க்கும் கீழே விற்பனை செய்யும் லைட்டர்களை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது இதனால் 50 சதவீதம் தீப்பெட்டி தொழில் மட்டுமே பாதுகாக்கப் படுகிறது தீப்பெட்டி தொழிலே முழுமையாக பாதுகாக்க வெளி நாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யும் லைட்டர்களை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட நகராட்சி கணக்கில் வராத குடிநீர் இணைப்புகள் உள்ளன மேலும் கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. ஆகவே கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து கணக்கில் வராத இணைப்புகளை கணக்கில் கொண்டு வந்து திருமணமண்டபங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முறைப்படி குடிநீர் வழங்கி கோவில்பட்டி மக்களுக்கு தினமும் சுத்தமான சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பேருந்து நிலையத்திற்கு சென்னையில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்குள் வராமல் பயணிகளை தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியிலேயே இறக்கி விடுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் மிகவும் திண்டாடுகின்றனர் ஆகவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேருக்கு தமிழக அரசு நினைவுத் தூண் எழுப்பி அரசு விழா எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு கேட்டு தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இறந்த தினமான ஜூலை 23 ஆம் தேதி தாமிரபரணிக்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture