திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் யோகாசனம் செய்து அசத்திய 9 வயது சிறுமி

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் யோகாசனம் செய்து அசத்திய 9 வயது சிறுமி
X

9 வயது சிறுமி யோகாசனம் செய்த காட்சி.

கோவில்பட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 133 திருக்குறள் அதிகாரத்தை குறிக்கும் வகையியில் 133 யோகாசனங்கள் செய்தார் 9 வயது சிறுமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக யோகா தினம் மற்றும் சிறார்கள் வன்கொடுமை தடுப்பை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மைக்ரோ பாயிண்ட் கல்வி மையத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் நிறுவனத் தலைவர் ஆம்ஸ்டிராங், வழக்கறிஞர் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்போது, 9 வயது மாணவி ரவீனா 133 திருக்குறள் அதிகாரத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு தலைப்பாக ஒருவர் வாசிக்க சிறுமி ரவீனா 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு செய்தார். அந்த நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


சிறுமி ரவீனா 133 திருக்குறள் அதிகாரத்துக்கு ஏற்ப 133 ஆசனங்களை செய்த அசத்தியதைத் தொடர்ந்து, மாணவி ரவீனாவுக்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் சிறுமியை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விஜயன், விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஷீலா ஜாஸ்மின், தொழிலதிபர் ராமராஜ், சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா கழக நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

133 திருக்குறள் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 133 வகையான யோகாசனம் செய்து சாதனை புரிந்த 9 வயது சிறுமி ரவீனாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது