கோவில்பட்டியில் நடந்த பகத்சிங் பிறந்த நாள் விழாவில் 62 பேர் ரத்ததானம்
கோவில்பட்டியில் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பாக விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்கின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. விழாவிற்கு பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன், தொழிலதிபர் அபிராமி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்ததான முகாமை ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் தொடங்கி வைத்து குருதிக் கொடையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குருதிக்கொடையளித்த தன்னார்வத் தொண்டர்களை வாழ்த்திப் பேசினார்.
மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் நிறுவனர் ராஜபாண்டியன் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்து ரத்தம் சேகரித்தனர்.
விழாவில் மருத்துவர் பூவேஸ்வரி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின், நிர்வாகிகள் சம்பத்குமார், கருப்பசாமி, ஐஎன்டியுசி ராஜசேகரன், மாமன்னன் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் செல்லத்துரை என்ற செல்வம், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சிவபெருமாள், பாபு பேராசிரியர் சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன், கதிரேசன், இசைக்கலைஞர் பிரபாகரன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், ஜெய்பீம் அறக்கட்டளை தாவீது ராஜா, காங்கிரஸ் நகரத்தலைவர் அருண்பாண்டியன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சியின் மகேந்திரன் மற்றும் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 62 பேர் ரத்ததானம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu