கோவில்பட்டியில் பீல்டு வில் விளையாட்டு சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டியில் பீல்டு வில் விளையாட்டு சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
X

கோவில்பட்டியில் தமிழ்நாடு பீல்டு வில் விளையாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பீல்டு வில் விளையாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு பீல்டு வில் விளையாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, டாக்டர். மதன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் கேசவன், வெங்கடேசன், துணை செயலாளர்கள் மணிகண்டன், ராஜ்கபூர், பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் மணிவாசகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீனிவாசன் நாகராஜ், சோலையப்பன், சட்ட ஆலோசகராக பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், வரும் டிசம்பர் மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பாண்டிச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்வது, உள் அரங்கு வில் விளையாட்டுப் போட்டிக்கு புதிய விதிமுறைகளை உருவாக்கி அதனை அனைவருக்கும் தெரியப்படுத்துவது, தேசிய தீர்ப்பாளர்கள் பயிற்சி முகாமை தமிழ்நாட்டில் நடத்துவது, தமிழ்நாட்டின் மாநில போட்டிகள் அட்டவணையை அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பீல்டு வில் விளையாட்டு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், சத்தியப்பிரியா, ஆகியோர் செய்திருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!