கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி அருகே  ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
X

பைல் படம்.

கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஹவுசிங் போர்டு காலனி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். நெல்லை சென்றுவிட்டு கோவில்பட்டிக்கு அரசு விரைவு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

கயத்தார் அருகே பேருந்து வந்தபோது, அவரது கைப்பையை மர்ம நபர் அறுத்து பறித்துச் சென்றுவிட்டார். அந்த பையில் அவர் 20 பவுன் நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கயத்தார் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா