பேருந்து நிறுத்தத்தில் வேன் மோதி பயங்கர விபத்து: 25 பேர் படுகாயம்

பேருந்து நிறுத்தத்தில்  வேன் மோதி பயங்கர விபத்து: 25 பேர் படுகாயம்
X
கோவில்பட்டி அருகே திதி கொடுக்க சென்றபோது பேருந்து நிறுத்தத்தில் வேன் மோதி பயங்கர விபத்து, 25 பேர் படுகாயம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இறந்தவருக்கு திதி கொடுக்க வெம்பூரைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சிப்பிக்குளத்திற்கு வேனில் சென்றனர். வேன் விளாத்திகுளத்தில் உள்ள சல்லிசெட்டிப்பட்டி என்ற கிராமத்தில் பயணித்த போது வேக கட்டுப்பாட்டை இழந்தது.

வேனை ஓட்டி சென்றவர் பன்னீர்செல்வம் வயது (45). ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சல்லிசெட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. மேலும் வேனை ஓட்டி வந்த பன்னீர்செல்வத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை சல்லிசெட்டிபட்டி ஊர் பொதுமக்கள் உதவியுடன் சங்கரலிங்கபுரம் காவல் துறையினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



Next Story