கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்கள் மீது குண்டாஸ் வழக்கு.

கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்கள் மீது குண்டாஸ் வழக்கு.
X

சண்முகம் - அவரது சகோதரர் கணேசன் 

அபூர்வ சகோதரர்கள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில்...

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக 'ரெம்டெசிவிர்"; குப்பிகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கடந்த மே13ம் தேதி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரெம்டெசிவிர் குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் சபாபதி அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் அவர்கள் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து சகோதரர்கள் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil