கிணற்றைக் காணவில்லை - வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்

கிணற்றைக் காணவில்லை - வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்
X
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் அரசன்குளம் கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு பஞ்சாயத்து வார்டில் உள்ள அரசன்குளம் கிராமத்தில், ஊர்மையப் பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கிணறு தூர் வாரப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் இப்பகுதி மக்கள் ஊர் கிணற்றை காணவில்லை எனவும், தூர் வார வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இப்பகுதியில் கோரி ஒன்று அமைய பணிகள் நடைபெற்று வருகிறது. கோரியை தடுத்து நிறுத்த வேண்டும், கிணற்றை தூர் வார வேண்டும் என தாலுகா அலுவலகத்தை வாக்காளர் அடையாள அட்டைகளுடன் இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

தாசில்தார் பேச்சிமுத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சு வார்த்தையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture