பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார் -அமைச்சர் கடம்பூர் ராஜு

பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார் -அமைச்சர் கடம்பூர் ராஜு
X
கோவில்பட்டியில் 1கோடியே 38 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவர்மங்கலம் பகுதியில் 45 லட்சம் மதிப்பில் பசுவந்தனை முதல் மந்தித்தோப்பு வரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை மூலம் 75 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார், மேலும் லாயல்மில் மேம்பாலம், சங்கரலிங்கபுரம் சர்வீஸ் ரோடு 18 லட்சம் மதிப்பில் அமைக்க அடிக்கல் நாட்டினார். இவ்வாறு பல்வேறு பணிகளை இன்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், நகராட்சி கமிஷனர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai in future agriculture