புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரருக்கு நினைவஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரருக்கு நினைவஞ்சலி
X

கோவில்பட்டி அருகே புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்பிரமணியன்(28). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2019 ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரர் சுப்பிரமணியனுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.இதை முன்னிட்டு அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சுப்பிரமணியனின் மனைவி, பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!