ஆலய திருப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

ஆலய திருப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக் கோவிலியில் 4 கோடி மதிப்பில் தங்க கொடிமரத்துக்கு திருப்பணி, சிறப்பு பூஜை நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் ரூ.9 கோடி மதிப்பில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story