மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள்

மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள்
X

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் சென்னை லவ்லி அகாடமி அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினார்.இப்போட்டியில், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் இந்தியன்போ, ரீகோபோ,காமன்போ என்று 3 பிரிவுகளில் 10, 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோர், மூத்தோர், வெற்றன் என பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை லவ்லி அகாடமி அணியினரும், 2ஆவது இடத்தை நாமக்கல் செவன் ஸ்டார் வில்வித்தை அகாடமியினரும், 3ஆம் இடத்தை விருதுநகர் டிராகன் வில்வித்தை அகாடமி அணியினரும் பெற்றனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்பி., ஜெயகுமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன், மருத்துவர் பிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!