மாணவர்களின் கதாநாயகன் முதல்வர் பழனிச்சாமி-கடம்பூர்ராஜூ
மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 40.52 கிலோ மீட்டர் தூரம் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்,மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.ஒரு ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகிப் போய்விடும் என்று கருதி அனைவரையும் ஆல் பாஸ் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆல் பாஸ் முதல்வர் என்று மாணவர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.
சொன்ன வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியுள்ளதால் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் ஸ்டாலின் உளறி வருகிறார். அவர் பேச்சில் தெளிவு இல்லை. உங்கள் தொகுதியின் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுகவினர் செட்டப் செய்து ஆட்களை பேச வைத்து வருகின்றனர். செட்டப் செய்து மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரியல் - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ரீல் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu