நூறு நாட்களில் குறைகள் தீர்க்கப்படும்: மு.க.ஸ்டாலின்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் உங்களுடைய குறைகளெல்லாம் தீர்க்கப்படும் என்றார். மேலும் அவர் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவகம் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றார். மேலும் மக்களின் கோரிக்கைகளாக அவரிடம் சொல்லப்பட்ட மீனவர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி, உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகை உயர்வு உள்பட மக்களின் கோரிக்கைகள் குறித்து தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை பெண் சிங்கம் என புகழ்ந்தார் ஸ்டாலின்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu