நாய் குட்டி வடிவில் உள்ள புழு - ஆச்சிரியத்துடன் பார்க்கும் மக்கள்

நாய் குட்டி வடிவில் உள்ள புழு - ஆச்சிரியத்துடன் பார்க்கும்  மக்கள்
X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டிற்கு வந்த நாய் குட்டி முகப்பு வடிவம் கொண்ட புழுவினை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சி தலைவராக உள்ளார். இவரது வீட்டில் ஒரு விநோத புழு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார். வழக்கமாக புழுக்கள் நீளமாக இருக்கும். ஆனால் இந்த புழு நீளமாக இருப்பது மட்டுமின்றி புழுவின் முகப்பில் இருகண்கள் போன்று கருப்பு கலரில் உள்ளது. மேலும் தலையின் கீழ் கருப்பு வடிவில் வாய் பகுதியும், பின்பக்கம் மஞ்சள் கலரில் வால் போன்ற அமைப்பு உள்ளது. புழுவினை நன்கு கூர்ந்து கவனிந்தால் பொம்மரியன் நாய் குட்டி போன்ற வடிவில் உள்ளது. இந்த புழு குறித்து வனத்துறையினருக்கும் பாலசுப்பிரமணியன் தகவல் கொடுத்துள்ளார். இந்த புழுவினை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!