கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச விழா திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச விழா திருவிளக்கு பூஜை
X

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சன்னதியில் தைப்பூச விழா திருவிளக்கு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் முலமந்திர ஹோமம், ருத்ர ஜெபம், மழை வளம் வேண்டி வருண ஜெபம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள் பால் தேன் விபூதி பன்னீர் சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பௌர்ணமி முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு 51ம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜைகள் செய்தனார். சிறப்பு பூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தேவகி ,ரவிநாரயணன், பழனி, சண்முகதாய் செய்திருந்தனர்.

Next Story