அதிமுக ஆட்சி தொடரவே தேர்தல்-கடம்பூர் ராஜூ

அதிமுக ஆட்சி தொடரவே தேர்தல்-கடம்பூர் ராஜூ
X

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் கிடையாது அதிமுக ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.5கோடியே 10 லட்சம் மதிப்பில் மாணவர் விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பச்சோந்தியை போல தேர்தல் வரவர நேரத்திற்கு நேரம் நிறத்தினை மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர் என்றார்.வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது.

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் கிடையாது. அதிமுக ஆட்சி தொடர்வதற்கான தேர்தல். நாங்கள் மட்டுமல்ல மக்களும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.யாராக இருந்தாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டால், உடல் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி கூறுவது வழக்கம். அந்த வகையில் தான் சசிகலா உடல் நலம் தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாம் என்றும், மத்தியஅரசு வழிகாட்டுதல் தெரிவித்தவுடன், அமைச்சர்களும் கோவிட் தடுப்பு ஊசி போடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!