கணவனை கொலை செய்த மனைவி, போலீசில் சரண்

கணவனை கொலை செய்த மனைவி, போலீசில் சரண்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை, மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம் மகன் பிரபு (37, மில் தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக உமா மகேஸ்வரிக்கு உடல் நல பிரச்சனை இருந்தது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பிரபு 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார். வரும் 25ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாம். இதனால் ஆத்திரம் அடைந்த உமா மகேஸ்வரி, இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அரிவாளுடன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!