அரசுப்பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
கடந்த 10 மாத காலமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 2021ம் ஆண்டு கொரோனா இல்லா தமிழகமாக திகழவும் பாரம்பரிய தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்கும் விதமாகவும், விவசாயம் செழிக்கவும் கீழக்கரந்தை அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதூர் வட்டார கல்வி அலுவலர் சரளா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார், மாணவ, மாணவியர், ஆசிரிய பெருமக்களை பள்ளி தலைமை ஆசிரியை சு. கவிதாவரவேற்றார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பின்னர் சர்க்கரை பொங்கலிட்டு அனைவரும் இன்புற்றிறுக்க இயற்கையை வணங்கி வழிபட்டனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி பரிசு வழங்கினார். மாணவ மாணவியர்க்கு சர்க்கரை பொங்கல், கரும்பு கொரோனா எதிர்ப்பு சக்தியை தூண்டும் பனங்கிழங்கு, பள்ளிச் சீருடை, புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, பெரோஸ்லில்லி, விஜயலட்சுமி, ராஜாத்தி ஆசிரியர் சக்திவேல், ஆரோக்கியராஜ், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், சத்துணவு அமைப்பாளர் ஆனந்த செல்வம், மகேஸ்வரி கலந்துகொண்டனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu