கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை ரோட்டரி ஆளுநர் அவர்கள் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்குவார்கள். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் முருகதாஸ் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிப்பறை வசதியும், நாலாட்டின்புதூர் கே.ஆர் சாரதாஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுவர் விளம்பரமும், குருமலை காப்புக் காடுகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளும் நடைபெற்றது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையும்,அரசு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு டேபிள் சேர் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் நாராயணசாமி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் மாரிமுத்து, இணைச்செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் அரசன் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி இதழை வெளியிட்டு 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர்கள் விநாயக ரமேஷ், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, சண்முக ராஜேஸ்வரன்,ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், டாக்டர் சம்பத்குமார், பாபு உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu