இளையோர் மன்ற வளர்ச்சி முகாம்

இளையோர் மன்ற வளர்ச்சி முகாம்
X
கோவில்பட்டி அருகே பாண்டவர் மங்கலத்தில் இளையோர் மன்ற வளர்ச்சி முகாம் நடை பெற்றது .

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா, பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்தி மகளிர் மன்றம் சார்பில் பாண்டவர் மங்கலத்தில் இளையோர் மன்ற வளர்ச்சி முகாம் நடைபெற்றது.

பாண்டவர் மங்கலத்தில் நடந்த இளையோர் மன்ற வளர்ச்சி முகாமில் இளைஞர்களுக்கு தலைமை பண்பு, அரசின் நலத்திட்டங்கள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமிற்கு கஸ்தூரிபாய் காந்தி மகளிர் மன்ற தலைவி அமுதா தலைமை வகித்தார். மன்ற ஆலோசகர் விஜயன், ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றச் செயலாளர் கனகரத்தினம் அனைவரையும் வரவேற்றார். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன் கலந்துகொண்டு இளைஞர் நலன் குறித்து பேசினார்.

முகாமில் நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர் மாரிமுத்து .கருங்குளம் சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் ஜெயராஜ், மன்ற ஒருங்கிணைப்பாளர் முருக லட்சுமி.மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி,நிவேதா,மது மாதா,விமலா ,உமா, வெண்ணிலா அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர் மன்ற உறுப்பினர் திலகவதி நன்றி கூறினார்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!