தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
X

மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதில் எரிந்த மீன்பிடி வலை.

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர். இவர், இனிகோ நகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் பீட்டர். மீனவர்களான இவர்கள் இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை அவர்களது வீட்டு அருகே அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே பீட்டர் மகன் அஸ்வின் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை பிடித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பீட்டர் மற்றும் தம்பி சுறா பாஸ்கர் ஆகிய இருவர் வீட்டு வாசல்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மண்ணெண்ணெய் பாட்டிலில் நிரம்பிய குண்டுகள் வீசியுள்ளனர்.

இதில், பீட்டர் வீட்டின் வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்தன. குண்டு வீசப்பட்டு வெடித்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்து பதற்றம் அடைந்தனர். உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து மீன் பிடிக்கும் வலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து தூத்துக்குடி தென்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக சிறார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!