தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் கவாத்து இறுதித் தேர்வு
தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.
தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.
தமிழகத்தில் சீருடைப்பணியாளர் தேர்வாணயம் மூலம் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் பல்வேறுகட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பயிற்சி பெறுவோர் முறையாக தேர்வு பெற்ற பிறகே காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை பணிக்கு செல்ல முடியும்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள் முடிவில் அவர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு நடத்தப்படுவது உண்டு.
இந்த நிலையில், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 519 காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு (Final Parade Test) இன்று நடைபெற்றது. இந்த கவாத்து தேர்வை காவலர் பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வரான காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், காவலர் பயிற்சி பள்ளி முதன்மை கவாத்து போதகர் சரவணகுமார், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu