கருணாநிதி நூற்றாண்டு விழா முத்தமிழ் தேர் நாளை தூத்துக்குடி வருகை

கருணாநிதி நூற்றாண்டு விழா முத்தமிழ் தேர் நாளை தூத்துக்குடி வருகை
X

முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி.

கருணாநிதி நூற்றாண்டு விழா முத்தமிழ் தேர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளது.

மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கருணாநிதி நூற்றாண்டு விழாவை நினைவுப்படுத்தும் வகையில், அவரது பன்முக ஆற்றலையும் அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும், முத்தமிழ்த் தேர் பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்து நேற்று புறப்பட்ட முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி நாளை தூத்துக்குடி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூபாலராயர்புரம் மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியை பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையும், ஆற்றலையும், சாதனைகளையும், இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ளுவதற்காக முத்தமிழ் தேர் என்று அலங்கார ஊர்தி 6.11.23 மாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி விவிடி சிக்னல் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் வருகிறது.

அங்கிருந்து புதிதாக கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் அருகிலும், பூபால்ராயபுரம் சந்திப்பு ஆகிய இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே, திமுக தொண்டர்கள் அனைவரும் அனைத்து இளைஞர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!