தூத்துக்குடியில் செயல்வீரர்களுக்கு கனிமொழி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடியில் செயல்வீரர்களுக்கு கனிமொழி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்
X
தூத்துக்குடியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி கழக செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி கழகத்தின் செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் - தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்னிசை கச்சேரியுடன் தொடங்கிய இந்த விழாவில், தி.மு.கழக செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story