தூத்துக்குடி இலங்கை தமிழர் பாரம்பரிய உணவக விழாவில் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி இலங்கை தமிழர் பாரம்பரிய உணவக விழாவில் கனிமொழி எம்.பி.
X

தூத்துக்குடியில் இலங்கை தமிழ் பெண்கள் நடத்திய உணவக விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்று அவர்களுடன்  உரையாடினார்.

தூத்துக்குடியில் இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவக இரண்டாமாண்டு தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி பங்கேற்றார்.

இலங்கை தமிழர்களின் உணவு வகையில் ஓலைப்புட்டு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், இலங்கைத் தமிழ் பெண்கள் நடத்தும் ‘ஓலைப்புட்டு உணவகம்' தூத்துக்குடி தச்சர்தெருவில் உள்ள மாநகாரட்சி வணிக வளாகத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கனிமொழி எம்.பி. உணவகத்தை திறந்து வைத்து ஓலைப்புட்டு சாப்பிட்டார். இந்த உணவகம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகமான ஓலைப்புட்டு உணவகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில்,தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு, இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தை நடத்தும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி உரையாற்றினார்.


நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன்– மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், UNHRC கள அலுவலக தலைமை அலுவலர் சச்சிதானந்த வளன், OFERR திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்ன ராஜசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தச்சர் தெரு மாநகராட்சி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைப்புட்டு உணவகம் தி.மு.க. எம்பி கனிமொழி உதவியுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் நிதி உதவி அளித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் மற்றும் ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு, தமிழ்நாடு அரசு ஆகியவை இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. முகாம்களில் சமைக்கப்படும் ஓலைப்புட்டை தற்போது உணவகத்தில் சமைத்து விற்பனை செய்கின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!