குடை வள்ளலாக மாறிய கனிமொழி எம்.பி.: அதிக நீரை பருக அறிவுறுத்தல்
தூத்துக்குடியில் வெயிலில் நடந்துச் சென்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. குடை வழங்கினார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்றே கூறலாம். வழக்கத்தைவிட இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அதிகளவு வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதற்கு ஏற்றால் போல தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலில் அளவு அதிகமாக காணப்படுகிறது.
இதனால், கோடை வெயிலில் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் பகலில் வெகுநேரம் வெயிலில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற கனிமொழி ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பபட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நடந்துச் சென்ற பெண்கள் பலரை அழைத்து அவர்களுக்கு குடை வழங்கினார்.
கனிமொழி எம்.பி. அழைத்து குடை வழங்கியதை சற்றும் எதிர்பாராத பெண்கள் இன்ப அதிர்ச்சியோடு கனிமொழிக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களிடம் கோடை தாக்கத்தை சமாளிக்கும் வகையில் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டார்.
இதேபோல, கடுமையாக இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலில் பொது மக்களுக்கு குடைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோடைக் காலத்தில், மக்கள் அனைவரும் வெளியே செல்கையில் தவறாமல் குடைகளை எடுத்துச் செல்லுங்கள். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதும் உடல் நீர் இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரையில் மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை வழங்கி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu