கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க கனிமொழி எம்.பி.நடவடிக்கை
மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்தில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையம் போலவே, வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கி கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நீர் வழங்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நேற்று துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள மஞ்சள்நீர்காயல் குடிநீர் வடிகால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இன்று நேரில் சென்ற கனிமொழி எம்.பி. அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். புதிய குழாய்கள் ஒரு மாதத்திற்குள் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த அதிகாரிகள். குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது குடிநீர் பிரச்னை தீர சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையெடுத்து, முக்காணி ஊராட்சி மற்றும் குதிரைமொழி ஊராட்சியில் கனிமொழி எம்.பி.யின் உத்தரவின் படி லாரி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu