தூத்துக்குடி மாவட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திர திட்டம் அறிமுகம்
இந்திய அஞ்சல் துறையின் தங்கப்பத்திர திட்டம் குறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
இந்திய அஞ்சல்துறை அஞ்சலகங்களில் பணமுதலீடு செய்யும் சாவரின் தங்கப்பத்திர திட்டம் இந்த ஆண்டின் முதல் விற்பனையை 19.06.2023 முதல் 23.06.2023 வரை தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5926 ஆகும்.
இந்தத் திட்டத்தல ஒருவர் ஒன்று முதல் 4 கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்துள்ள பணத்திற்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டித்தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன் மூலம் வீடுகளில் தங்கம் காகித வடிவில் மட்டுமே இருக்கும். எனவே தங்க நகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 8 ஆண்டுகளில் இப்பத்திரம் முதிர்வடையும். எனினும் ஐந்தாண்டுகளுக்கு பின்; பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து பணம் பெறலாம். அவசர தேவைக்கு தங்கப்பத்திரத்தை அரசு, தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.
இந்தப் பத்திரத்தைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் கார்டு நகல் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டை நகலும் கட்டாயம் வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை. துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அஞ்சல் வணிக அலுவலுவர்களை 9942693129 மற்றும் 9791655030 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu