தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேர்முக தேர்வு
திருநெல்வேலி ஆவினில் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் தூத்துக்குடி ஆவின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி நேரடி நியமன தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி ஆவின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பிரதம 181 சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 27,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021 – 22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 1 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் செப்டம்பர் 19 ஆம்தேதி அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இந்த நேர்முக தேர்வு பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தூத்தக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu