ஸ்டெர்லைட் ஆலையில் சார் ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
Sterlite Meaning in Tamil-தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆலை பராமரிப்பு மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஜிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகளை அகற்றுவது பசுமை வளாகம் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்காமல் தமிழக அரசு சார்பில் துணை ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ஹேமந்த், தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்பு துறை மாவட்ட துணை அலுவலர் ராஜு, ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தனர். இந்த குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் பணியை துவங்கினர்.
இதற்காக தீயணைப்பு துறை அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு அலுவலர், புறநகர் டிஎஸ்பி என தனித்தனியாக அதிகாரிகள் வாகனத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளே சென்றுள்ளனர். இது தொடர்ந்து சார் ஆட்சியர் கௌரவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை வளாகத்திற்குள் சிப்சம் மற்றும் கழிவுகள் உள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு நிறைவு அடைந்ததை தொடர்ந்து 9-பேர் கொண்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியே வந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற சுமார் 1-30மணி நேரம் ஆய்வின் போது எவ்வளவு அளவு சிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகள் உள்ளது அதனை எத்தனை மாதங்களில் அகற்றுவது மற்றும் ஆலை கழிவுகளை அகற்றும்போது லாரிகள் வெளியே செல்வதை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது ஆகியவை குறித்து இந்த ஆய்வில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வு குழுவினர் அதனை அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட இருப்பதாக ஆய்வுக் குழுவினர் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முன்பு சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu