தூத்துக்குடியில் ஜனவரி 5ம் தேதி வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன மாநாடு

தூத்துக்குடியில் ஜனவரி 5ம் தேதி வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன மாநாடு
X

தூத்துக்குடியில் நடைபெற்ற வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் பேசினார்.

தூத்துக்குடியில் வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன மாநில பிரதிநிதிகள் மாநாடு ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறுகிறது.

வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார். மேலும், கோரிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

தொடர்ந்து, வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன அகில இந்திய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 14 ஆவது மாநில பிரதிநிதிகள் மாநாடு மற்றும் பேரணி வருகிற ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு வருமான வரித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது தமிழகத்தில் வருமான வரித்துறையில் 800 பேர் பனிநியமனம் செய்யப்பட்டதில் 150 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். அதை தவிர்க்கும் வகையில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். பணியில் இருக்கும் போது உயிரிழந்த வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் கொரோனாவில் பலியான ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது என வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன அகில இந்திய தலைவர் வெங்கடசேன் தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது