தூத்துக்குடியில் ரூ. 28 கோடியில் உருவாகும் நவீன ஸ்டெம் பூங்காவில் மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் ரூ. 28 கோடியில் உருவாகும் நவீன ஸ்டெம் பூங்காவில் மேயர் ஆய்வு
X

ஸ்டெம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவீன அறிவியல் திரையரங்கை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் ரூ. 28 கோடியில் உருவாகி வரும் நவீன ஸ்டெம் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 1000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல் கோளரங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா, ஸ்டெம் பூங்கா, பேருந்து நிலையம், வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின்பு தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிப் பணியில் அனைத்து தரப்பும் மக்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌ அந்த வகையில் தூத்துக்குடி அம்பேத்கர்நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 28 கோடி மதிப்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூங்காவில் மனிதனின் பரிணாம வளர்ச்சி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவு மையத்தில் ராக்கெட் ஏவுதள மாதிரி, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் உருவங்கள், அறிவியலில் இயற்பியல் கணக்குகளை செய்முறையாக செய்வது குறித்த மாதிரிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பாதிப்புகளை விளக்கும் டிஜிட்டல் அரங்குகள், மாணவர்களுக்கு திரை காட்சிகள் மூலம் அறிவியல் குறித்து அறிவை வளர்ப்பதற்கான நவீன டிஜிட்டல் திரையரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒப்பந்ததாரரிடம் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பணிகள் அனைத்தும் தரமாகவும் நன்றாகவும் மாணவ மாணவிகள் பயன் பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.

தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது

சென்னை, கோவை, உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளில் இருப்பது போன்ற இந்த அறிவியல் பூங்கா இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும். இந்த நவீன ஸ்டெம் பூங்காவை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!