48 மணிநேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு முடிவா? கனிமொழி எம்.பி. பதில்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் குடிநீர் திட்டப்பணிக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், தென்திருப்பேரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடபெற்ற நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க .துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டார்.
தென் திருப்பேரை பேரூராட்சி மேலரத வீதியில், அம்ரூத் குடிநீர் திட்டப்பணிகள், 4 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கலை கனிமொழி எம்.பி. நாட்டி பணியை தொடங்கி வைத்தார். அடிக்கல் நாட்டு விழாவில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்டம் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என எச். ராஜா டுவிட்டரில் பதிவு செய்ய அவருக்கு நேரம் உள்ளது. அவர் கனவு காணலாம். பனை சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தமிழக முதல்வர் அறிவித்தபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே முதல்முறையாக தென்திருப்பேரையில் தொடங்கப்பட்டுள்ள அம்ருத் குடிநீர் திட்ட பணி 9 மாதத்தில் முடிவடையும். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சி மடத்துவிளையில், புதிய ரேஷன் கடையையும், ஆறுமுகநேரி பேரூராட்சி ராஜமன்புரத்தில், புதிய ரேஷன் கடையையும் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மேலும், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ. 34.65 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பிரதமரின் பொது வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்படவுள்ள புறநோயாளிகள் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu