தூத்துக்குடியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில அமைப்புச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu