தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கனமழை: நாட்டுப் படகு சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கனமழை: நாட்டுப் படகு சேதம்
X

தடை தட்டிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகு காற்றின் வேகத்தில் திசை மாறி முத்துநகர் கடற்கரை பகுதியில் தரைதட்டி நிற்கிறது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையே, தூத்துக்குடி கடல் பகுதியில் 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதனால், மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த சம்சு என்பவருக்கு சொந்தமான நாட்டு படகு திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக நாட்டுப்படகின் நங்கூரம் அறுந்து கடல் பகுதியில் நாட்டுப்படகு திசை மாறி சென்று முத்துநகர் கடற்கரை பகுதியில் தரைதட்டி நிற்கிறது.

இதன் காரணமாக படகில் கடல் பகுதியில் இயங்குவதற்கு பயன்படும் படகின் முகப்பில் உள்ள இதழ்கள் மற்றும் படகின் ஓரப்பகுதிகள் என ரூபாய் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பகுதியில் தரை தட்டி நிற்கும் நாட்டு படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு தங்களுக்கு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!