தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் நூதன முறையில் போராட்டம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் நூதன முறையில் போராட்டம்
X

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளை பணியில் இருந்து நிறுத்தியதை கண்டித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்புவது மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஆயில் மாற்றுவது போன்ற பணிகளை மாற்றுத்திறனாளிகள் சிலர் செய்து வந்தனர்.

இந்த பணியில் ஈடுபடபவர்களுக்கு அதிகளவு ஊதியம் வழங்குவது கிடையாது என்ற போதிலும் சிலர் ரூ. 5 அல்லது ரூ. 10 வழங்குவர். இந்த நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு பணி வழங்கபட மாட்டாது என அந்த நிறுவனம் திடீரென அறிவித்து உள்ளது.

மேலும், பணியில் இருந்த மாற்றுத்திறனாளிகளை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து உள்ளனர். திடீரென பெட்ரோல் பங்க் பணியில் இருந்து நிறுத்தியதால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகரில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் பாரா விளையாட்டு கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் தாரை தப்பட்டை அடித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு தலையிட்டு தங்களுக்கு பெட்ரோல் பங்கில் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.‌ ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மத்திய அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் தாரை தப்பட்டை முழங்க தங்கள் எதிர்ப்பை மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்தனர்.

மேலும், தங்களுக்கு மீண்டும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பணிகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பொதுமக்கள் யாரும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என்று இளைஞர்களுடன் சேர்ந்து பொதுமக்களிடம் வலியுறுத்துவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings