தூத்துக்குடியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
X

மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது நலத்திட்ட உதவியை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திய பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 415 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார். இதேபோல, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ. 2,960 மதிப்பிலான காதொலிக் கருவியினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

குறைதீர் கூட்டத்தில், மாவட் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) வீரபுத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா