தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Goondas Act Arrest 9 Person
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மணி (60) என்ற தொழிலாளி கடந்த மாதம் 13 ஆம் தேதி அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர்களான லெட்சுமணன் (43), சங்கரசுப்பு (40), சீனிபாண்டி (31), பேச்சிமுத்து (35), ராமையா (45), ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து (21), மாரி (22), மணக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (36) மற்றும் மணக்கரை ஆர்.சி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரியரசு (33) ஆகிய 9 பேரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 9 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
இதையெடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்பேரில், கொலை வழக்கில் கைதான லெட்சுமணன், சங்கரசுப்பு (40), சீனிபாண்டி, பேச்சிமுத்து, ராமையா, ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து, மாரி, மணக்கரை அம்மன் கோவில் தெருவைச்த சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் மணக்கரை ஆர்.சி தெருவை சேர்ந்த மாரியப்பன் ஆகிய 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 182 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu