தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 76 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 76 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
X

பைலே படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல், கஞ்சா விற்பனை, போஸ்கோ வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கடந்த 20.05.2023 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு வைத்து குலசேகரன்பட்டினம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் (70) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவை சேர்ந்த சின்னத்துரை (25) என்பவரை குலசேகரன்பட்டினம்; காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான சின்னத்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

இதையெடுத்து, கொலை வழக்கில் கைதான குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவை சேர்ந்த சின்னத்துரை என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் கொலை வழக்கில் கைதான சின்னத்துரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறியதாவது:இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 76 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future