தூத்துக்குடியில் 5 ஏழை மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் ஐந்து ஏழை மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
Free Marriage For Handicap Couples
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், லூசியா மாற்றுத்திறனாளி மறுவாழ்வு மையம் சார்பில், கடந்த 25 ஆண்டுகளாக ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தி அவர்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது இதுவரை சுமார் 100 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டுத் திருமணத்துக்கான சுயம்வரம் நிகழ்ச்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான இணையை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Free Marriage For Handicap Couples
மாற்றுத்திறனாளி மணத் தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட சீர் பொருட்கள்
அவர்களில் 5 ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் இன்று திருமணம் நடைபெற்றது. சில்வர்புரத்தில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நடைபெற்ற
திருமண நிகழ்ச்சியில், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு சிறப்பு திருப்பலிக்கு பின் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தாலி செயின், கம்மல் மற்றும் கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமண வைபவத்தில் மாற்றுத்திறனாளி ஜோடிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu