Free Coaching For TRB Exam தூத்துக்குடியில் ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு

Free Coaching For TRB Exam  தூத்துக்குடியில் ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு
X
Free Coaching For TRB Exam தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

Free Coaching For TRB Exam

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2222 காலிப் பணி இடங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான போட்டித் தேர்வு 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 53 வயது (பொது பிரிவினர்) மற்றும் 58 வயது (இதர பிரிவினர்) ஆகும். மேலும், TET PAPER II தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023. மேலும் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இந்தத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 17.11.2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பு வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) நடைபெறும். இப்போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரம்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

மேலும் 17.11.2023 அன்று நடைபெறும் அறிமுக வகுப்பிற்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு PASSPORT SIZE புகைப்படம் மற்றும் TET PAPER II தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் தகவல்களை Thoothukudi Employment Office எனும் TELEGRAM CHANNEL-இல் இணைந்து அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461 - 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். TRB பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!