வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி: தூத்துக்குடியில் ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி: தூத்துக்குடியில் ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சக்கையா.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டு வேலைக்கான போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போதிலும் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த எபனேசர் (45) என்பவர் விளாத்திகுளம் வி. வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாளமுத்து (31) என்பவரிடம் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

அதை நம்பி எபனேசரிடம் ரூபாய் 40,000 பணத்தை தாளமுத்து கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட எபனேசர் தாளமுத்துவுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தாளமுத்து அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையெடுத்து, எபனேசரை கடந்த 18.08.2023 அன்று போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் தலைமை காவலர் செந்திவேல் முருகேயன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மோசடி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி எட்டையாபுரம் சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்த சக்கையா (வயது54) என்பவரை கடந்த 7 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
ai solutions for small business