தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பு அலுவலர்கள் நியமனம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பு அலுவலர்கள் நியமனம்..!
X
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் இருந்து வரப்பெறும் நிவாரணப் பொருட்களை இனம் வாரியாகப் பிரித்து கிராமம் வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் ஏரல் ஆகிய வட்டங்களில் அதிகப்படியான வெள்ளச்சேதம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வட்டங்களில் இயல்பான வாழ்க்கை திரும்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும், பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்வதை உறுதிப்படுத்தவும், வட்ட வாரியாக வட்டாட்சியர்களுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி வட்டத்துக்குட்பட்ட தூத்துக்குடி, புதுக்கோட்டை, கீழதட்டப்பாறை, முடிவைத்தானேந்தல் பகுதிக்கு சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மதுரை துணை ஆட்சியர் அமர்நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், வல்லநாடு, தெய்வசெயல்புரம் ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்கள் காளிதாஸ், தியாகராஜன் துணை ஆட்சியர்கள் திருநாவுக்கரசு, ரஞ்சித், திருச்செந்தூர் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், துணை ஆட்சியர் முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்பு அலுவலர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மற்றும் ஏரல் வட்டங்களில் அதிகப்படியான வெள்ளச் சேதம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த வட்டங்களில் இயல்பான வாழ்க்கை திரும்பிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, கிராமவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வட்ட வாரியாக பிற மாவட்டகளில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future with ai